Posts

விமானத்தில் ஒரு ரெக்கை

Image
விமானத்தின் தொழில் நுட்பங்கள் குறித்து தொடர்ந்து வாசித்து வருகிறேன், உண்மையிலேயே எத்தனை பெரிய அறிவியல் கண்டுபிடிப்பு இது, ஒவ்வொரு முறையும் அதை வாசிக்கும் போது வியக்கிறேன். இணையத்திலும் ஆயிரக்கணக்கான காணொளிகள் உள்ளது, ஒவ்வொன்றும் லத்சக்கணக்கான அறிவியல் அடிப்படைகளை, செய்திகளை சுமந்து நிற்கிறது. அதை எல்லாம் வாசித்தாலும் இந்த விமானத்தில் ஒற்றை ரெக்கையில் இந்த படத்தை பார்க்கும் போது எல்லாம் வயிற்றில் ஏதோ ஒரு கதக் தட்டுப்படுகிறது, இருப்பினும் அதை எல்லாம் தாண்டி நாம் பயணிப்பது அறிவியலின் அடிப்படையிலான விமானம் தானே, புஷ்பக விமானம் அல்லவே என்கிற தெகிரியத்தில் பறக்கிறேன்...

இலைகளை கால்நடைகள் ஆர்வத்துடன் உண்ணும்போது. மற்றும் அதன் தண்டில் உள்ள தெளிவான நீரை குடிக்க முடியும்.

Image
ஆப்பிரிக்காவில் வளரும் தனித்துவமான மரங்களில் பாவோபாப் மரங்களும் உள்ளன. ஒரு கணக்கீட்டின் படி இந்த மரங்கள் பூமியில் பழமையான மரங்களாக உள்ளன. சவன்னாவில் (ஆப்பிரிக்கா) காலநிலை மிகவும் வறண்டதாக உள்ளது. மற்ற மரங்கள் சிரமப்பட்டு வளரும் இடமது. அந்த பாவோபாப் மரம் அங்கு செழித்தோங்குகிறது. மழைக்காலங்களில், பாவோபாப் மரம் அதன் அகன்ற கிளையில் தண்ணீரை உறிஞ்சி சேமிக்கிறது. ஒரு முழு மரம் பல்லாயிரம் லிட்டர் தண்ணீரை தன்னுள் சேமித்து வைக்க முடியும். தன் கிளையில் சேமித்து வைத்திருக்கும் தண்ணீர் பல வருடங்களாக மரம் உயிர் வாழும் அளவிற்கு உதவுகிறது. இது வறட்சியிலும் வாழும் பாவோபாப் மரம் 30 மீட்டர் உயரம் வரை வளர முடியும். அது ஐயாயிரம் ஆண்டுகள் வரை வாழ முடியும். பாவோபாப் மரங்கள் விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கு தங்குமிடம், உணவு மற்றும் தண்ணீர் வழங்குகின்றது , அதனால் தான் பல சவன்னா சமூகங்கள் தங்கள் வீடுகளை கட்டியுள்ளனர். பாவோபாப் மரங்களுக்கு அருகில் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. மேலும் இந்த மரம் உயிரை போன்ற மரமாக கருதப்படுகிறது. இந்த மரத்தின் பழங்களில் விதிவிலக்காக சத்துக்கள் மற்றும் ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள...

Flight Controls (ATA 27)

Image
Direct Cable Control Systems In the direct cable control system, the cockpit controls are connected to the control surfaces with high-strength steel cable. Operation of the control column places tension on the cable.  As the cable passes through the fuselage, it is supported by the pulleys. The pulleys also enable the direction of the control cable to be changed.  Tension of the control cable system is critical. This kind of control is only usable in low speed general aviation aeroplanes. The force the pilot feels on the steering column while steering the plane, is in direct relation to the airspeed.  Therefore: The higher the airspeed, the greather the force on the steering column.

மதுகுப்பியின் மேல் படர்ந்து இருக்கும் கொட்டலசு (Barnacle)

Image
கொட்டலசு (Barnacle) என்பது கணுக்காலி வகையைச் சார்ந்த ஓட்டுடலிகளில் ஒன்றாகும். இது நண்டு மற்றும் இறால் ஆகிய இனங்களுடன் நெருங்கிய தொடர்புடையவையாக உள்ளன. பரிணாமத்தில் பல இலட்சம் ஆண்டுகள் மூத்த இந்த உயிரிகளின் இளம் உயிரிகள் கடலில் மிதக்கும் பொருட்களின் மேலும், கடல் நீரில் நிறுவப்பட்டு இருக்கும் தூண்களின் மேலும், பாறைகளின் மேலும் பாசிகளைப் போன்று படர்ந்து ஒட்டிக் கொள்ளும்.  இது உயிருள்ள கடலாமை, திமிங்கலம் போன்ற பேருயிர்கள் முதல் சிறிய நண்டினங்கள் மேல் கூட ஒட்டிக் கொண்டு உயிர் வாழும். ஒருமுறை இவை ஒரு உயிருடன் தன்னை ஒட்டிக் கொண்டு உயிர் வாழ ஆரம்பித்தால் அதன் வாழ்நாள் முழுதும் அதனுடனே வாழும். துறை முகங்களில் நீண்ட நாட்களாக கப்பல்களின் அடிபகுதியில் முழுதும் படர்ந்து விட்டால் சில நேரம் கப்பல்கள் கூட  நகர முடியாமல் போய் விடும். அதன் வாய் போன்ற பகுதியின் வழியாக கடலில் மிதக்கும் நுண் உயிரிகளை உணவாக உட்கொள்ளும். படத்தில் காண்பது கடலில் வீசி எறியப்பட்ட மதுகுப்பியின் மேல் படர்ந்து இருக்கும் கொட்டலசு (Barnacle).

தாமிர, வெங்கல மற்றும் பித்தளைப் பாத்திரங்களைப் பயன்படுத்துவது நல்லதா?

 தாமிரத்தால் (காப்பர் Cupper) செய்த சொம்பு. இதில் தண்ணீர் குடித்தால் நல்லது. வீட்டுக்குக் கொண்டு போங்கள்" என என்னிடம் உறவினர் ஒருவர் தந்தார்."நான் சிரித்தவாறே வேண்டாம்" என்றேன். "ஏன்? வேண்டாம் என்கின்றீர்கள். உடம்புக்கு நல்லதுங்க" என்றார். "இது எங்களுக்குச் சரிப்பட்டு வராது. வேண்டவே வேண்டாம்" என்றேன். "காசு கொடுக்கத் தேவை இல்லை. இலவசமாகத்தான் தருகிறேன் கொண்டு போங்கள்" என்றார். "சின்னப் பிள்ளைகள் உள்ள வீடு எங்களுக்குத் தாமிர பாத்திரங்கள் சரிப்படு வராது " என்றேன். "சின்னப் பிள்ளைகளுக்கும் இது நல்லதில்லையா?" எனக் கேட்டார். "அப்படி அல்ல. இந்த பாத்திரத்தில் எலுமிச்சைச் சாறு, கரைத்த புளி, புளித்த தயிர் போன்ற அமிலத்தன்மை கொண்ட பொருள்களை வைத்தால் விசமாக மாறிவிடும். இதனைக் குடித்தால் வாந்தி பேதியாகும். ஏன்? உயிரிழப்புக்குக் கூட வாய்ப்புள்ளது" என்றேன். சற்று அதிர்ந்தார். "உண்மையாகவா?" என்றார் ஆச்சரியமாக. "ஆமாங்க.. மயில் துத்தம் கொடூரமான நஞ்சு. மயில் துத்தம் என்பது தாமிரத்தால் ஆன ஒரு உப்பு. இது மயில் கழுத்து...

CURRENT ELECTRICITY

MATHEMATICAL TOOLS IN PHYSICS