Posts

Showing posts from May, 2023

தாமிர, வெங்கல மற்றும் பித்தளைப் பாத்திரங்களைப் பயன்படுத்துவது நல்லதா?

 தாமிரத்தால் (காப்பர் Cupper) செய்த சொம்பு. இதில் தண்ணீர் குடித்தால் நல்லது. வீட்டுக்குக் கொண்டு போங்கள்" என என்னிடம் உறவினர் ஒருவர் தந்தார்."நான் சிரித்தவாறே வேண்டாம்" என்றேன். "ஏன்? வேண்டாம் என்கின்றீர்கள். உடம்புக்கு நல்லதுங்க" என்றார். "இது எங்களுக்குச் சரிப்பட்டு வராது. வேண்டவே வேண்டாம்" என்றேன். "காசு கொடுக்கத் தேவை இல்லை. இலவசமாகத்தான் தருகிறேன் கொண்டு போங்கள்" என்றார். "சின்னப் பிள்ளைகள் உள்ள வீடு எங்களுக்குத் தாமிர பாத்திரங்கள் சரிப்படு வராது " என்றேன். "சின்னப் பிள்ளைகளுக்கும் இது நல்லதில்லையா?" எனக் கேட்டார். "அப்படி அல்ல. இந்த பாத்திரத்தில் எலுமிச்சைச் சாறு, கரைத்த புளி, புளித்த தயிர் போன்ற அமிலத்தன்மை கொண்ட பொருள்களை வைத்தால் விசமாக மாறிவிடும். இதனைக் குடித்தால் வாந்தி பேதியாகும். ஏன்? உயிரிழப்புக்குக் கூட வாய்ப்புள்ளது" என்றேன். சற்று அதிர்ந்தார். "உண்மையாகவா?" என்றார் ஆச்சரியமாக. "ஆமாங்க.. மயில் துத்தம் கொடூரமான நஞ்சு. மயில் துத்தம் என்பது தாமிரத்தால் ஆன ஒரு உப்பு. இது மயில் கழுத்து...