Posts

Showing posts from January, 2024

மதுகுப்பியின் மேல் படர்ந்து இருக்கும் கொட்டலசு (Barnacle)

Image
கொட்டலசு (Barnacle) என்பது கணுக்காலி வகையைச் சார்ந்த ஓட்டுடலிகளில் ஒன்றாகும். இது நண்டு மற்றும் இறால் ஆகிய இனங்களுடன் நெருங்கிய தொடர்புடையவையாக உள்ளன. பரிணாமத்தில் பல இலட்சம் ஆண்டுகள் மூத்த இந்த உயிரிகளின் இளம் உயிரிகள் கடலில் மிதக்கும் பொருட்களின் மேலும், கடல் நீரில் நிறுவப்பட்டு இருக்கும் தூண்களின் மேலும், பாறைகளின் மேலும் பாசிகளைப் போன்று படர்ந்து ஒட்டிக் கொள்ளும்.  இது உயிருள்ள கடலாமை, திமிங்கலம் போன்ற பேருயிர்கள் முதல் சிறிய நண்டினங்கள் மேல் கூட ஒட்டிக் கொண்டு உயிர் வாழும். ஒருமுறை இவை ஒரு உயிருடன் தன்னை ஒட்டிக் கொண்டு உயிர் வாழ ஆரம்பித்தால் அதன் வாழ்நாள் முழுதும் அதனுடனே வாழும். துறை முகங்களில் நீண்ட நாட்களாக கப்பல்களின் அடிபகுதியில் முழுதும் படர்ந்து விட்டால் சில நேரம் கப்பல்கள் கூட  நகர முடியாமல் போய் விடும். அதன் வாய் போன்ற பகுதியின் வழியாக கடலில் மிதக்கும் நுண் உயிரிகளை உணவாக உட்கொள்ளும். படத்தில் காண்பது கடலில் வீசி எறியப்பட்ட மதுகுப்பியின் மேல் படர்ந்து இருக்கும் கொட்டலசு (Barnacle).